கொரோனா வைரஸ் பரவும் எச்சரிக்கை இருப்பதனால், அவசர தேவை இருப்பின் மட்டுமே கண் வைத்தியாசலைக்கு
விஜயம் செய்யுமாறு தேசிய கண் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் டபிள்யூ.எல்.எல்.யூ.சீ.
குமாரதிலக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இக்காலப் பகுதியில் விபத்துக்களுடன் தொடர்பான சிகிச்சைகள் மற்றும் அவசியமான சேவைகளைப்
பெறுவதற்காக மட்டும் இவ்வைத்தியசாலைக்கு வருமாறு அவர் கோரியுள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், சிகிச்சைக்காகவும், சேவைகளைப் பெறவும் நாளாந்தம் 3,000 அளவிலானோர் தேசிய கண் வைத்தியாசலைக்கு வருகின்றனர். ஒரே இடத்தில் இவ்வாறான பெரும்தொகையினர் ஒன்றுகூடுவது வைரஸ் பரவலுக்கான
வாய்ப்பை அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மக்கள் அதிகம் ஒன்றுகூடுவதை அரசாங்கம் தடுத்துள்ள
நிலையில், அவசர தேவைகளுக்கும், அவசிய தேவைகளுக்கும்
மாத்திரம் தேசிய கண் வைத்தியாசலைக்கு வரும்படியும், அருகிலுள்ள அரசாங்க வைத்தியாசலைகளின் கண் சிகிச்சை
பிரிவுகளுக்குச் செல்லும்படியும் அவர் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment