கொரோன வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இன்று (16) வழங்கப்பட்டிருந்த விடுமுறை நீடிக்கப்படாது என்று பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், மேல் மாகாண ஆளுநர் வைத்தியர் சீதா அரம்பேபொல தலைமையில், விடுமுறை வழங்குவது தொடர்பில் ஆராயும் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை வழங்குவது தொடர்பில் பாரிய சிக்கல்கள் இருக்கின்றன. திங்கள விடுமுறை வழங்கினோம். விடுமுறை வழங்கியதுடன், பிரச்சினைகள் எழுகின்றன.
வங்கிகள் இயங்க முடிவதில்லை. பண்டிகையும் முன்னே வருகின்றது. விடுமுறை தினங்களில் வேட்புமனு ஏற்றுக்கொள்வதற்கு சட்டத்தில் இடமில்லை.
இன்னும் சில நாட்களுக்கு நிலையை அவதானித்து, விடுமுறை வழங்குவது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள பரிந்துரையின்படி, பின்னர் முடிவொன்று எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment