Monday, 16 March 2020

கோள்மண்டலம் தற்காலிகமாக மூடப்படுகிறது


இலங்கை கோள்மண்டலம் நாளை (17) முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றது. கொரோன வைரஸ் பரவும் அச்சம் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோள்மணடத்தில் பணிப்பாளர் பிரபா பெரேரா தெரிவித்துள்ளார்.

விடுமுறை நீடிக்கப்படாது: பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சி


கொரோன வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இன்று (16) வழங்கப்பட்டிருந்த விடுமுறை நீடிக்கப்படாது என்று பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் மூன்று COVID-19 நோயாளிகள் கண்டுபிடிப்பு: வைத்தியர் அனில் ஜயசிங்க


இன்று (16) கொரோனா வைரஸ் தொற்றிய மூன்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

இவர்களில் இருவர் 50, 37 வயதுடைய ஆண்கள் என்றும், மற்றையவர் 13 வயதுடைய சிறுமியொருவர் என்றும் அவர் தெரிவித்தார்.

அவசர, அவசிய தேவைக்கு மட்டும் கண் வைத்தியாசலைக்கு வரவும் - பணிப்பாளர் கோரிக்கை



கொரோனா வைரஸ் பரவும் எச்சரிக்கை இருப்பதனால், அவசர தேவை இருப்பின் மட்டுமே கண் வைத்தியாசலைக்கு விஜயம் செய்யுமாறு தேசிய கண் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் டபிள்யூ.எல்.எல்.யூ.சீ. குமாரதிலக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இக்காலப் பகுதியில் விபத்துக்களுடன் தொடர்பான சிகிச்சைகள் மற்றும் அவசியமான சேவைகளைப் பெறுவதற்காக மட்டும் இவ்வைத்தியசாலைக்கு வருமாறு அவர் கோரியுள்ளார்.

கொரோனா வைரஸ்: 18 பேருக்கு உறுதி; 212 பேர் கண்காணிப்பில்

இன்று (16) மு.ப. 10 மணி வரையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, 08 வெளிநாட்டவர் உட்பட 212 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும், 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யபடப்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

கோள்மண்டலம் தற்காலிகமாக மூடப்படுகிறது

இலங்கை கோள்மண்டலம் நாளை (17) முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றது. கொரோன வைரஸ் பரவும் அச்சம் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோள்மண...